திருமதி. ரவிலோற்சனி உதயவர்மன்
தோற்றம்: 22 ஏப்ரல் 1941 - மறைவு: 28 செப்டம்பர் 2025
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Ajax - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரவிலோற்சனி உதயவர்மன் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குணரத்தினம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
துரைராஜா - விமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
உதயவர்மன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராகவி, ராகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிலோற்சனன், ரகுலோற்சனி, ரகுலோற்சனன், ராஜ்லோற்சனன், ராஜ்லோஷனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரோகினி, ஞானலதா, உதயசங்கர், யோகரஞ்சினி, ரவிச்சந்திரன், சாந்தி, மோகனா, சாமுவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புவனேசன், மைதிலி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
சரண்யா, ஜோதிகா, ரிதிக்கா, இயலினி, நிரோஷன், பிரதீப், விதுஷன், விகாஷன், யதுஷன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
நரேன், சுரேன், சுருதி, நிரா, சேரா, சமீரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 - 3:15 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
