திரு. ரவிசங்கர் சர்மா
மறைவு: 14 ஏப்ரல் 2025
யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ரவிசங்கர் சர்மா அவர்கள் 14-04-2025 திங்கட்கிழமை காலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருமதி. வதனா (பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி உப அதிபர்) அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
