திருமதி. இராஜேஸ்வரி துரைச்செல்வம்
(முன்னாள் ஆசிரியை)
தோற்றம்: 03 ஆகஸ்ட் 1943 - மறைவு: 25 செப்டம்பர் 2024
யாழ். கரம்பன் மேற்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நறுவிலடியை புகுந்த இடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி துரைச்செல்வம் அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
இரத்தினவடிவேல்-சின்னமயில் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன் (கனடா), பரணீதரன் (டென்மார்க்), ராம்நாத் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வினி, ரூபி, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்வின், வர்ஷன், நிதுர்ஷன், அஸ்வினி, நிரவிந், ஷாயிரா, ஷாயிஷா, ஷாயிமா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இராஜயோகேஸ்வரி, ஶ்ரீபதி, விவேகானந்தன், விக்னராஜா, ராஜாஜி மற்றும் மங்களேஸ்வரி (டென்மார்க்), சுகிர்தா (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராமசாமி, நாராயணசாமி, வைரமுத்து, அருட்செல்வம் மற்றும் பரமேஸ்வரன் (டென்மார்க்), புஸ்பமலர் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை Jens Chrustensens P1.10,7441 Bording, Denmark எனும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
