திருமதி. ரெங்கம்மா சுப்ரமணியம்

ரெங்கம்மா சுப்ரமணியம்

தோற்றம்: 05 ஏப்ரல் 1943 - மறைவு: 16 ஏப்ரல் 2026

தெரணியகல உடபாகையை பிறப்பிடமாகவும், இல- 45/2, பிரதான வீதி வட்டவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரெங்கம்மா சுப்ரமணியம் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமாள் - காமாட்சி தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற D.சுப்ரமணியம் (கௌரி ட்ரேடிங் கம்பனி) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூர் செல்வி, கலைச்செல்வி, செந்தூர் குமார், திருச்செல்வி, செந்தூர் செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசங்கரன், நந்தகுமார், கல்யாணி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

மாதவன், வேலுகுமார், மணிவண்ணன், பவானி, அபிராமி, கலைமகள், கவிதா, சண்முகராஜன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-04-2026 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-04-2026  ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2026 00:00)