Mr. Rinos Nithiyanadan

Rinos Nithiyanadan

Date of Birth: 12 March 2001 - Deceased: 03 December 2024

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,  Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. றினோச் நித்தியானந்தன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராஜேந்திரன் -மரகதம் தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான வைரவநாதன்-கனகமணி தம்பதியினர் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன் (ஆனந்தன்)-மணிமாலா (வாசுகி) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

சர்ஜினா, லிசானா, கிஷோர் ஆகியோரின் அருமைத் தம்பியும்,

சேந்தன், திருசன் ஆகியோரின் ஆசை மைத்துனரும்,

நித்தீரனின் குட்டி மாமாவும், ரஞ்சிதமலர்-எம்.எஸ். தனபாலன், வசந்தமலர்-சிவனேஸ்வரன், ரவீந்திரநாதன்-கூல்சன், துரேந்திரநாதன்-ஜெனமலர், திருநாதன், ஜெகநாதன்-கவிதா ஆகியோரின் ஆசை மருமகனும்,

சிவானந்தன்-சுஜாதா, சசிமாலா-மகேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் மற்றும் மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1)  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2024 05:00)