திருமதி. ரிஷாந்தினி நடேசன்

ரிஷாந்தினி நடேசன்

தோற்றம்: 10 மே 1979 - மறைவு: 19 மார்ச் 2026

வெதமுல்லை, இறம்போடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. ரிஷாந்தினி நடேசன் (லங்கா வைத்தியசாலையின் முன்னாள் உத்தியோகத்ர், சைவமங்கையர் வித்தியாலயம், வெள்ளவத்தை - பழைய மாணவி) அவர்கள் இன்று 19-03-2026ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. நடேசன் (முன்னாள் தலைமை கணக்குபிள்ளை), அகிலாண்ம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

மிருஷ்னிரேஷதன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

பவித்திரா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சங்கர் கணேஷ், பிரதீப் குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தூர் மித்திரன், சவிதூர் வரேண்யன், திவ்யேஷ், கவினேஷ், அகிஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-03-2026ம் திகதி புதன்கிழமை இன்று மாலை 4:00 மணிமுதல் இரவு 10:00 மணிவரையும், மறுநாள் 20-03-2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் அஞ்சலிக்காக புஞ்சி பொரளை(Punchi Borella) லங்கா மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு மாலை 3:00 மணிக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2026 17:43)