Mrs. Rita Savundranayagam

Rita Savundranayagam

Date of Birth: 06 October 1946 - Deceased: 25 October 2026

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், Ontario - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரீட்டா சவுந்தரநாயகம் அவர்கள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பெஞ்சமின் ஆபிரகாம் - ஆன் கிரேஸ் ஆபிரகாம் தம்பதியினரின் அன்பு மகளும், 

ஆண்டன் சவுந்திரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மரியா, குளோரியா, ஜெனிவிவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிராட்டியன் ஆல்ஃபிரட்டின் மாமியாரும்,

கேப்ரியல், அன்னாபெல் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஜோசப் ஜெரார்ட், பாத்திமா ஜசிந்தா, செபாஸ்டியன் ஜெரோம், ஜெயாம் ஆண்டனி  ஆகியோரின் சகோதரியும்,

மேரி மார்கரெட், லூயிஸ் ஞானப்பிரகாசம், லியோனி வத்சலா, ஷியாமா ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற திருத்தொண்டர் ஜோசப் - நாளாயினி சவுந்திரநாயகம், எய்லீன் - வின்ஸ்டன் மார்ட்டின், பீட்டர் - சாந்தி சவுந்திரநாயகம், வணக்கத்திற்குரிய Dr. மைக்கேல் சவுந்திரநாயகம், ஹெலினா - நிமல் ரோட்ரிகோ, தாமஸ் - காலஞ்சென்ற சுலோகினி சவுந்திரநாயகம், முரியல்  - Dr. ரேமண்ட் ஆகியோரின் பாசமுள்ள நாத்தனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:30 - 8:00 மணி வரையும், 02-11-2026 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON. L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. David's Parish (Maple, ON L6A 1C6 2601 Major Mackenzie Drive West) இல் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் Holy Cross Catholic Cemetery (8361 Yonge Street Thornhill, ON L3T 2C7) இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்."

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2026 00:00)