திருமதி. ரோகினி ஸ்ரீஸ்கந்தராஜா
தோற்றம்: 23 செப்டம்பர் 1953 - மறைவு: 25 மே 2025
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியல் West Island ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரோகினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம் - தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகநாதன் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
உமா, அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரோஷன், ஜேசன், கவின், அர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
ரஞ்சினி நடராஜா (இலங்கை), ரஞ்சன் (இலங்கை), காலஞ்சென்ற ரட்னேஸ்வரன், ரஞ்சித் (ஜேர்மனி), ரமேஷ் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை Rideau Funeral Home (75 Soul, Sources, DDO,QC, H9B 2A6) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
