திருமதி. ரோகிணியம்மாள் கணேசபிள்ளை
தோற்றம்: 18 மே 1931 - மறைவு: 11 செப்டம்பர் 2026
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா - டொரொன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரோகிணியம்மாள் கணேசபிள்ளை அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கேணி, காரைநகர் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்துப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
விமலாதேவி (கனடா), நவமணி (காரைநகர்), விமலச்சந்திரன் (கனடா), பாலச்சந்திரன் (பிரதேசசபை, காரைநகர்), இந்திராதேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுப்ரமணியம் (கனடா), சிவபாலன் (காரைநகர்), குணவதி (கனடா), நந்தினி (காரைநகர்), கந்தசாமி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, சுந்தரமூர்த்தி, வைசிகமகபதி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
சுகுணவதி (கனடா), சிவயோகம் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான மைனா, அன்னபூரணம், மாரிமுத்து, செல்லத்துரை, துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனுஷா - விக்கினேஸ்வரன், சித்ரா - தர்மலிங்கம், நிரஞ்சனா - வெற்றிவேல், உதயசங்கர் - வினிதா, கஸ்தூரி - சுதாகரன், நிமலன், வத்சலா, பிரதீபா - மதன், பவதாரணி - சிறீகரன், தர்சிகா - சிற்சபேசன், கௌசல்யா, சிந்துஜா - சுதாகரன், சிவசங்கர் - லக்ஷா, ரதீசன் - மரியான், துர்க்கா - பிரசாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கஜப்பிரியன், ஆதவன், தியானா, அகரன், ஜெனன், விசாகன், எல்லோன், நேயன், அல்லி, நிறாயா, அருணன், நரேன், மகிழினி, வலவன், அர்வின், இயலி, ஐரா, மாயன், ஆற்றலன், அலை, மாறன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கேணி, காரைநகர் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாலச்சந்திரன் (மகன்):- +94 76 554 1837
விமலச்சந்திரன் (மகன்):- +94 76 481 5138
www.tamilthakaval.org
