Mr. S. Jegatheswaran
Date of Birth: 26 January 1970 - Deceased: 07 April 2024
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை (இல-29, டாக்டர் ஈ.ஏ. குரே மாவத்தையை) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - சிவயோகம் தம்பதியினரின் அன்பு புதல்வரும்,
ராஜரட்ணம் - காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஶ்ரீலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சதுர்ஷன், பிரதீஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன், சிறிதரன் மற்றும் திரு. பாஸ்கரன், திரு. தயாபரன், திருமதி. சுகந்தினி, திரு. சசிஹரன், திரு. பிரதீபன் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 10-04-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
