திரு. S. நடராஜா

(N.S.K பேன்சி உரிமையாளர்)

S. நடராஜா

மறைவு: 15 மார்ச் 2024

இந்தியா. திருச்சி மாவட்டம், திருமனூர் கிராமம், நோர்வூட்டை சேர்ந்த மாத்துடையான் கோத்திரம் கொண்ட திரு. S. நடராஜா அவர்கள் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம்பிள்ளை - செல்லம்மாள் (கணபதி ஸ்டோர்ஸ் - ராகலை) தம்பதியினரின் செல்வப் புதல்வனும்,

காலஞ்சென்ற கந்தசாமிப்பிள்ளை - விசாலாட்சி அம்மாள் (அருணகிரி ஸ்டோர்ஸ் - நோர்வூட்) தம்பதியினரின் மருமகனும்,

செராணி அவர்களின் அன்புக்கணவரும்,

ரினோஷின் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், இராஜேஸ்வரி, ஜெயகுமார் (கணபதி ஸ்டோர்ஸ்) மற்றும் விஜயகுமார் (சென்னை), காலஞ்சென்ற மகாலிங்கம் (ஶ்ரீ பாலகிருஷ்ணா ஸ்டோர்ஸ் - ராகலை), கணேஸ்ராஜா (கணபதி ஸ்டோர்ஸ் - ராகலை), சசிகலா ஆகியோரின் சகோதரரும்,

பிரபாகரன் (இந்தியன் மெடிக்கல்ஸ் - ஹட்டன்) அவர்களின் மைத்துனரும்,

சதாசிவம் (ஈரோடு), காலஞ்சென்றவர்களான அருணகிரி (அருணகிரி ஸ்டோர்ஸ் - நோர்வூட்), யமுனா மற்றும் தேன்மொழி ஆகியோரின் மைத்துனரும்,

சேதுராமன், பாலசந்திரன் ஆகியோரின் சகலையும், பிரதீபன், ரவிந்திரன், சுதர்ஷன், சுபாஷினி, நிரோஷன், நரேந்திரன், திவ்யபிரியா, ரூகாஷன், விஷ்ணுகாந், நவீன் ஆகியோரின் சித்தப்பாவும்,

சம்ரித்தா, மதுரிஷா ஆகியோரின் பெரியப்பாவும், சந்தியா, தனுஷாந், யதுர்ஷிகா ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-03-2024 சனிக்கிழமை அன்று  இல- 180, பிரதான வீதி, நோர்வூட் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின் நோர்வூட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 04:00)