Mr. Sivanirththanantha (S. S. Ananthan)
Date of Birth: 08 April 1955 - Deceased: 12 March 2026
B.A(Hons)-(Col), M.Phill (Jaffna) PhD(Jaffna), PGDE. (Col), SLEAS, ASSISTANT DIRECTOR OF EDUCATION, PROVINCIAL DEPARTMENT OF EDUCATION EASTERN PROVINCE-TRINCOMALEE
மட்டக்களப்பு, கிரானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி சிவலிங்கம் சிவநிர்த்தானந்தா (S.S.ஆனந்தன்) அவர்கள் 12-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் - லீலாவதி தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
கமலேஸ்வரி (ஓய்வு பெற்ற ஆசிரியை - கொழு. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - பம்பலபிட்டி) அவர்களின் அன்புக்கணவரும்,
மயூரன், சங்கவை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அந்தனி (யோகான்) இன் சிறிய தந்தையும்,
சிவபவானந்தன், காலஞ்சென்ற சிவயோகநாதா, சிவபவானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
டிலோ, காலஞ்சென்ற சர்வலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீணா, இளங்கோவன், சிசிலி ஆகியோரின் மாமனாரும்,
பவித்திரனின் பாசமிகு மாமாவும்,
புருசோத், குயிலினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 - 4.00 மணி வரையும், 16-03-2026 திங்கட்கிழமை காலை 9.00 - 12.00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
