திரு. S.T.S. அருளானந்தன்

(தலைவர்-லீலா குரூப், கிரீன்லண்ட ஹோட்டல், ராம்சன் டெராசோ, கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை,)

S.T.S. அருளானந்தன்

தோற்றம்: 30 ஜூலை 1943 - மறைவு: 27 செப்டம்பர் 2024

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S.T.S அருளானந்தன் (J.P) அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற எஸ்.ரீ. சின்னத்துரை-சௌபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செனட்டர் ரீ. நீதிராஜா-திலகவதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற அமிர்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சுணா, அனுஜன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாமினி, அனிதா, ராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிஷ், சத்வி, அம்ரித், அசோக் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (சட்டத்தரணி), பாலேந்திரா (சட்டத்தரணி), காலஞ்சென்ற சோமசேகரம் (வைத்தியர்), தேசபந்து, லோகநாதன், தனபாலா, சொக்கநாதன், ரவீந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானலட்சுமி, புவனேஸ்வரி, இந்திரா, சரோஜினி, கிருபாலக்‌ஷ்மி, கமலவேணி, ஶ்ரீமணி, அஞ்சனா, பத்மினிதேவி ஜெயந்தினி, காலஞ்சென்றவர்களான வடிவேட்கரசன், தனராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 29-09-2024 மற்றும் 30-09-2024 முற்பகல்  10.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-10-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று,  மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்த  லை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2024 04:00)