திரு. S. யோகராஜ்
(ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் - லிட்டில்வௌி தமிழ் வித்தியாலயம், கலஹா)
தோற்றம்: 22 மார்ச் 1963 - மறைவு: 01 ஜூலை 2024
கண்டி கலஹாவைச் சேர்ந்த திரு. S.யோகராஜ் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம்-வள்ளியமமை தம்பதியினரின் அன்பு புதல்வரும், திருகோணமலை காலஞ்சென்ற சுப்பிரமணியம்-சிவமணி தம்பதியினரின் மருமகனும்,
கீதாஞ்சலி (ஆசிரியை - அத்திமோட்டை தமிழ் வித்தியாலயம், திருகோணமலை),
துவிஜா, லிசிகேஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்,
தனலட்சுமி, சிவபாக்கியம், மஞ்சுளாதேவி, காலஞ்சென்ற நிர்மலா தேவி, செல்வராஜ் (பராசக்தி ஸ்டோர்ஸ்-கலஹா) ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பதுளை ராஜகோபால், அமரசிங்கம், விஜயராஜன் மற்றும் மனோகரன் ஆகியோரின் மைத்துனரும்,
சரிதா, பிரியா, ஶ்ரீபிரியா, உமாசாந்தினி, காயத்திரி, திலகலதா (ஆசிரியர்-விவேகானந்த தமிழ் வித்தியாலயம், கண்டி) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் கலஹா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04-07-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, கலஹா ஆறேக்கர் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
இல-77, பிரதான வீதி, கலஹா.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
