Mr Sabapathi Thiyagarajaha
(Rtd. C.T.B Conductor)
Date of Birth: 18 September 1944 - Deceased: 07 March 2024
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், பத்தர் கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை தியாகராஜா அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென் R.T. ஆறுமுகம் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,
தியாகேஸ்வரி, மதியழகன், சந்திரவித்தியா, வையந்திமாலா, ஜெயசித்திராதேவி, குலச்சந்திரன், கிருசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருந்தவராசா, மயூரகுமரன், ஜெயராணி, நித்தியானந்தசிவம், சந்திரகுமார், மயூரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தாரணி, பவித்திரன், கபிலன், நிஷாயின, கரிகாலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, துரைச்சாமி மற்றும் ஜெயலட்சுமி, செல்வராணி, காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 08-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளிற்காக நீலங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
பத்தர் கேணியடி,
காரைநகர்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
