திரு. சபாபதிப்பிள்ளை தியாகராசா
(ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பதிகாரி - விவசாயத் திணைக்களம்)
தோற்றம்: 23 ஏப்ரல் 1935 - மறைவு: 06 ஜூலை 2025
யாழ். மாதகல் கனல் வீதியைப் பிறப்பிடமாகவும், இல-11, டச்சு வீதி, வட்டு கிழக்கு, சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை தியகராசா அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசு - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயில்வாகனம் (சிங்கப்பூர்), மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாதேவி (ஆசிரியை - பிரித்தானியா), அனுஷா (ஆசிரியை - யாழ். சங்கானை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயம்), ஜெயசீலன் (கணக்காளர்), குணசீலன் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
பாலகிருஷ்ணன் (முகாமையாளர் - NCP), ஈஸ்வரன் (ஆசிரியர் - யாழ். சுழிபுரம் விக்டோறியக் கல்லூரி), வித்தியா, நிந்துஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷாந்தி, நிஷாந்தன், ஆரோன், அஸ்னி, சரவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-07-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் போதி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
