டாக்டர். சபாபதிப்பிள்ளை இராசரத்தினம்

(ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி)

சபாபதிப்பிள்ளை இராசரத்தினம்

தோற்றம்: 06 மே 1929 - மறைவு: 26 ஜனவரி 2025

யாழ். நயினாதீவை பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை - விசாலாட்சி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான S.N.K கந்தையா - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கேதாரகௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிருபாலினி, குமரேசன், மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகுமார், கௌசி, Dr. பரணிதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனித்தா, சுஜன், கௌரீசன், கர்ஷணி, வர்ஷிணி, ஓம்காரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான லலிதாதம்பிகை, நீலாம்பிகை, சாந்தினி மற்றும் மகாலிங்கசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற இராஜ இராஜேஸ்வரி, நாகேஸ்வரன், சிவராஜசூரியர், பிறைசூடி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-01-2025 புதன்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 30-01-2025 வியாழக்கிழமை காலை 9.00 - 10.00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 05:00)