(18-03-2025 செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி (Sri Lanka Time))

திரு. சபாரட்ண ஐயர் கணேஷ சர்மா

(Retired Plant Manager - Asbestos Cement Industries Ltd)

சபாரட்ண ஐயர் கணேஷ சர்மா

தோற்றம்: 25 மார்ச் 1937 - மறைவு: 15 மார்ச் 2025

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், இல-102/9, டெம்ளர்ஸ் வீதி, கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ண ஐயர் கணேஷ சர்மா அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் ஐயர் - அனந்தலக்‌ஷ்மி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

சதாசிவம்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ருக்மணி தேவி அவர்களின் அன்புக்கணவரும்,

சிவராம் (கொழும்பு), சிவதாஸ் (பிரித்தானியா), சிவகாந்தன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தக்‌ஷாயினி, தர்ஷினி, ஷர்மிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஈஷ்வரி, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனுகித், ஜினுக்‌ஷா, பிராதிவ்ஷா, நேஹா, நமிதா, இஷானி, சஹானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை காலை முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2025 04:00)