Mr. Sabaratnam Gnanachandran

Sabaratnam Gnanachandran

Date of Birth: 30 November 1959 - Deceased: 27 February 2025

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் ஞானச்சந்திரன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - கனகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற இராசலிங்கம் - லீலாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரகா, சலுஜா, சாருஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனுஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ரிதம், ரெயின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற யோகநாதன், சிவபாக்கியம், சிவஞானம், இராசரத்தினம், காலஞ்சென்ற சிவகங்கை (கிளி) மற்றும் பாலசுப்பிரமணியம், ஸ்ரீரஞ்சனி (ஸ்ரீ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சன், ரமணன், ராகினி, ரஜீவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 03-03-2025 திங்கட்கிழமை முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***--------------------***

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2025 05:00)