திரு. சபாரத்தினம் குணநாயகம் (குணம் மாஸ்ரர்)
மறைவு: 09 ஜூன் 2024
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், யாழ் காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் குணநாயகம்(குணம் மாஸ்ரர்) 09.06.2024 ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதமடைந்துவிட்டார்
அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் தங்கத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மூதூரைச்சேர்ந்த கனசிங்கம் ஜெயராணி தம்பதிகளின் மருமகனும்,
குமாரலட்சுமியின் அன்புக்கணவரும்,
அஜந்தன் (திரைப்பட இயக்குனர், சக்தி ரிவி), மயூரன் (ஆசிரியர், சாம்பல் தீவு தமிழ் மகாவித்தியாலயம், திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
பிரதீபாவின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதிப்பிள்ளை, கனகசபாபதி (முன்னாள் கிராமசேவையாளர் ஜே 47 ),சண்முகரத்தினம் (முன்னாள் அஞ்சலதிபர்,காரைநகர் ) ஆறுமுகம்பிள்ளை (முன்னாள் விற்பனையாளர் ப.நோ.கூ சங்கம் ,காரைநகர்,) மற்றும் சகுந்தலாதேவி, சறோஜினிதேவி, இராசநாயகம் (ஓய்வுநிலை பிரதம இலிகிதர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை) சுந்தரேஸ்வரன் (நல்லைக்கமரன் ரெக்ரைல்) ஆகியொரது பாசமிகு சசோதரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை 10.06.2024 திங்கள் கிழமை காலை 6 மணிக்கு அன்னாரது நீலிப்பந்தனை இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக சாமபலோடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2024 06:03)
