திரு. சபாரட்ணம் ஞானலிங்கம் (ஞானம்)
தோற்றம்: 27 செப்டம்பர் 1955 - மறைவு: 16 மே 2026
யாழ். உடுவில் கிழக்கு பெரிய மதவடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் ஞானலிங்கம் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - நாகரத்தினம் தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,
வசந்தலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுயன், கயன் (யாழ்கோ பால்சாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வமணி, கணேசலிங்கம், தியாகலிங்கம், கருணாதேவி மற்றும் புஸ்பதேவி, சரசாதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
தட்சாயினியின் அன்பு மாமனாரும்,
சங்கவி, அங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சிவபூதவராயர் கோயில் வீதி, சுன்னாகம் தெற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்று, திருவுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
