திரு. சபாரட்ணவடிவேல் நடனகுருசாமி

(ஓய்வுபெற்ற ஊழியர் - இலங்கை துறைமுக அதிகாரசபை)

சபாரட்ணவடிவேல் நடனகுருசாமி

தோற்றம்: 17 ஜூன் 1940 - மறைவு: 07 நவம்பர் 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணவடிவேல் நடனகுருசாமி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணவடிவேல் - இலட்சுமியம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி - கணேஷபாக்கியம் தம்பதியினரின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி - மாணிக்கரெத்தினம் தம்பதியினரின் மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இரட்ணசிகாமணி, ஜெயலட்சுமி (இலண்டன்), வீரசிகாமணி, காலஞ்சென்ற தேவசிகாமணி, சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நித்தியலட்சுமி (இலண்டன்), செல்வானந்தம் (சிங்கப்பூர்), வரலட்சுமி (இலண்டன்) ஆகியோரின் பெரியண்ணாவும்,

வாசுகி (ஓய்வுபெற்ற ஆசிரியை), நிரஞ்சன் (கனடா), ரமணி (மிருக வைத்திய அதிகாரி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஆறுமுகதாஸ் (டோக்கியோ சீமெந்து நிறுவனம்), ஜனனி (கனடா), கருணாகரன் (கணக்காய்வாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கரெத்தினம், சிவகுமாரசாமி மற்றும் வசந்தராணி, தனரத்னம் (வண்டம்மா), பாலசுப்பிரமணியம், முருகவேல் (இலண்டன்), பழனிவேல் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சக்திவேல், வெற்றிவேல் (நோர்வே), தங்கவேல், ஜெயகுலசிங்கம் (கனடா), காலஞ்சென்றவர்களான ஞானகுலசிங்கம், வசந்தாதேவி, சண்முகானந்தம் மற்றும் மகேந்திரநாதன் (இலண்டன்), காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் மைத்துனரும்,

செல்வகுமார் (இலண்டன்), அகிலா, காலஞ்சென்ற பாலகுமார், ஆனந்தகுமாரன் (இலண்டன்), யாழினி, வேணுகா, சங்கீதா (விவசாயத் திணைக்களம்), வாகிசன் (கிராம உத்தியோகத்தர்), நித்தியா ஆகியோரின் பெரிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராணி, தேவி மற்றும் கஜன் (நோர்வே), ரதி (இலண்டன்), விஜி (இலண்டன்), ராதா (நோர்வே), விஷ்ணு (இலண்டன்), சாந்தினி (ஆசிரியை), சரோஜினி (கிராம உத்தியோகத்தர்), மதுமதி (இலண்டன்) ஆகியோரின் தாய்மாமனும்,

லுஜிவன், மிதுரன், வசந்த் (கனடா), சயந்தினி (கனடா), பவித்ரா, மேரி அலன் ஆகியோரின் பேரனும்,

அபிராமா, கதிர் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

இல- 30/B, ஜோர்ஜ் வீதி,

திருகோணமலை.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2025 00:00)