சிவஶ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன்
(கலாசார உத்தியோகத்தர் - யாழ் இந்தியத் துணைத் தூதரகம்)
தோற்றம்: 07 மார்ச் 1973 - மறைவு: 26 மே 2025
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்கள் 25-05-2025 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தக் குருக்கள் (சின்ன ஜயா - கரவெட்டி தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய குரு) - பாகீரதி அம்மாள் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
சீதாலக்ஷ்மி (யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர்) அவர்களின் அன்புக் கணவரும்,
அக்க்ஷை, அபிஷேக், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவாகரன் அவர்களின் அருமைச் சகோதரரும்,
சுவாமிநாத ஐயர், இந்துமதி, ஜெகதீஸ்வர ஐயர், இரத்தினகைலாசநாத சர்மா, இராதாகிருஷ்ண ஐயர், கஜலக்ஷ்மி (உதவி அதிபர் - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரத், ஸ்நேஹா, நிதேஷ் ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையாரும் ஆவார்.
அன்னாரின் அந்திமக்கிரியைகள் 28-05-2025 புதன்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
முகவரி:-
இல-7/9 A, பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கை, கோவில் வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
