திஞ சடயபிள்ளை சதாசிவம்
(Silverstar Trading - Old Moor Street Colombo - 12)
மறைவு: 28 ஏப்ரல் 2026
வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சடயபிள்ளை சதாசிவம் அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கிப்பட்டி கிராமம் மருதுடையான் கோத்திரம் காலஞ்சென்றவர்களான சடயபிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - லக்ஷ்மி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்தீப், ஸ்ரீ ஆதித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியா, அஜய் ஆகியோரின் தாத்தாவும்,
அஷோக்கின் (கோபி - அவுஸ்திரேலியா) அன்பு மாமனாரும்,
ரகுபதி (Aruna Enterprises, Old Moor Street Colombo -12) - ரத்னஜோதி - தம்பதினரின் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜ்பிள்ளை (திருச்சி), கணேஷன்பிள்ளை (Vahini Hardware - Kandy), தர்மலிங்கம் பிள்ளை (திருச்சி), சாரதாம்பாள் (திருச்சி) மற்றும் நடராஜா (Hemas Jewellers - Sea Street)ஆகியோரின் சகோதரரும்,
சிவலிங்கம்பிள்ளை (Loyds), காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை (Silver Crown Hardware), சுப்பிரமணியம் (Dollar Traders Kandy), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
சரோஜினி, தவமணி (திருச்சி), பவானி ஆகியோரின் மைத்துனரும்,
சுப்பையாப்பிள்ளை (குளித்தலை), ராஜகோபால் (Rano Trading) ஆகியோரின் சகலையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று காலை 7:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் Borella Jayaratna) பார்வைக்காகை வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்ற், பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
