திருமதி. சகுலாரஞ்ஞனி பரமலிங்கம் (சித்ரா)

சகுலாரஞ்ஞனி பரமலிங்கம் (சித்ரா)

தோற்றம்: 11 பெப்ரவரி 1951 - மறைவு: 01 ஜூலை 2026

யாழ். அளவெட்டியைப் பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சகுலாரஞ்ஞனி பரமலிங்கம் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராமநாதன் - கமலாதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்தி ஐயம்பிள்ளை - கண்மணி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற V.I பரமலிங்கம் அவர்களின் மனைவியும்,

யசோதா, குணசீலன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜயந்திராஜ் (ஐயா-கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தயானி (கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2026 00:00)