திருமதி சகுந்தலா தேவி கதிர்காமர்

Mrs Sakundala Devi Kathir Kamar

(முன்னாள் ஆசிரியர் - யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு சீ.எம். எஸ். மகளிர் கல்லூரி, முன்னாள் போதனாசிரியர் - யாழ். பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர் - அவோயமா ககுவின் பல்கலைக்கழகம் (டோக்கியோ, ஜப்பான்)

(Former Teacher - Jaffna College, Colombo C. M. S. Women's college Former Teaching Teacher - Jaffna University Former lecturer - Avoama Kaguin University (Tokyo, Yappon)

சகுந்தலா தேவி கதிர்காமர்

தோற்றம்: 15 ஜூலை 1940 - மறைவு: 28 பெப்ரவரி 2024

Date of Birth: 15 July 1940 - Deceased: 28 February 2024

கொழும்பினைப் பிறப்பிடமாகவும், நல்லூர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சகுந்தலா தேவி கதிர்காமர் அவர்கள் 28-02-2024 புதன்கிழமை அன்று நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி அரசரட்ணம் - பரிமளம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான வன. ஜே. டபிள்யூ. ஏ கதிர்காமர் - கிறேஸ் நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாந்தசீலன் கதிர்காமர் (முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் - யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இந்திரா ஜோர்ஜ், ஜெயசீலன் அரசட்ணம் மற்றும் தர்மசீலன் அரசரட்ணம் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அஜயன் (கனடா), அகிலன் (யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரம்யா (யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

அர்ஜீனா, நடீனின ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 29-02-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இல-63, ரக்கா ஒழுங்கை, நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி வீதியிலுள்ள சென். ஜேம்ஸ் ஆலய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி

இல-63, றக்கா ஒழுங்கை,

நல்லூர்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Sakundala Devi Kathirkamar, born in Colombo and resident of Nallur, Jaffna passed away yesterday (28 - 02 - 2024) at her residence in Nallur.
 
Late elder brother - Rasaratnam Parimalam Rasaratnam couple's loving daughter and late Vana. J. W. A. Kathirkamar - Beloved daughter-in-law of Chris Nesamma couple, loving wife of late Shantaseelan Kathirkamar (former Sirest lecturer, Jaffna University), beloved sister of late Indira George, Jayaseelan Rasaratnam and Dharmaseelan Rasaratnam (Jaffna), Ajayan (Canada), Akilan (Jaffna University Kala Kazhagam) is their beloved mother-in-law, Arjuna, Nateen's beloved grandmother.
 
Annar's last service on Thursday (29.02.2024) B. P. 63 at 3:30, Rakka Organization held at his residence in Nallur, Sen. Thiruvudal Semmani Road. Burial will be done at James temple ground.
 
All relatives and friends please accept this notification.
 
Address:-

63, Raka Organization,
Nallur

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/02/2024 05:00)