திருமதி. சகுந்தலாதேவி சிவச்சந்திரன்

சகுந்தலாதேவி சிவச்சந்திரன்

தோற்றம்: 24 ஜனவரி 1962 - மறைவு: 27 பெப்ரவரி 2025

யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சகுந்தலாதேவி சிவச்சந்திரன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான நடராசா - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரஷாந், பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றஜிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

திஷாந் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற விஜயலெட்சுமி (விசியா), சத்தியதேவி (தேவி), காலஞ்சென்ற பரமேஸ்வரன் (ராசன்), தவனேஸ்வரன் (தவம்), மணிமாலா (மாலா), சுவேந்தினி (பிள்ளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வில்வரெத்தினம், காலஞ்சென்றவர்களான கனகசபை, செந்தாமரைச்செல்வி மற்றும் குகராணி, தணிகாசலம், நடேசநாதன், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வில்வஜோதி, வில்வகரன், விஜயதரன், பபிஷன், சதீஷன், சாந்தினி ஆகியோரின் அன்பு அன்ரியும்,

சுகிதா, சபிஷா, லக்க்ஷியா, பிரவீனன், அபிசனா, விதூர்ஷா, தகீஷன், தேனூர்ஷா ஆகியோரின் அன்பு அத்தையும்,

சுவிஷன், சுவீபன், நதுஷா, நதுஷன், சதுஷன், சனுஷியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-03-2025 வியாழக்கிழமை காலை 9:30 - 11:30 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2025 05:00)