யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சகுந்தலாதேவி உத்தமலிங்கம் அவர்கள் 08-02-2024 வியாழக்கிழமை அன்று தை அமாவாசை திருவோண நட்சத்திரத்தில் இயற்கை எய்தினார்.
அன்னார, காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவஞானம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - ரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் - உத்தமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வாசுகி, சிவசங்கர், காலஞ்சென்ற சசிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சர்வேந்திரன், கமலவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோமேஸ்வரானந்தன், புனிதவதி, காலஞ்சென்ற சுசிலாதேவி, குகநேசன், குமரேசன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சோமலிங்கம், கணேசலிங்கம், சபாலிங்கம் மற்றும் யோகலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற கனகரட்ணம், சிவசுப்பிரமணியம், இந்திராதேவி, ராஜி, காலஞ்சென்ற அருணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜித்தா - நிரூபன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நவிரா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org

