யாழ். ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாம்பசிவம் சரவணமுத்து அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - லஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தங்கமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, ராஜலட்சுமி, புஸ்பலட்சுமி, பாலசுப்பிரமணியம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலோஜினி, சறோஜினி, சிவகாந்தன், சிவரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கதேவ், மோகன், ரஜனி, விநாயகலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மயூரன், திசாந்தி, ஆதித்யா, டிலன், அபிநயா, சரண், சைந்தவி, மாறன், விதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மயிலா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 10-12-2025 புதன்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

