Mr. Samynathan Rajmeenan

Samynathan Rajmeenan

Date of Birth: 25 August 1996 - Deceased: 22 July 2026

யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சாமிநாதன் றாஜ்மீனன் அவர்கள் 22-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சாமிநாதன் - காலஞ்சென்ற தவமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,

துஸ்யந்தன் (பிரான்ஸ்), ஜிந்துஜா (பிரான்ஸ்), சர்மிலன், சாருஜா, கஜமுகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சங்கீரணி, ஜெயரூபன், கீர்த்தனா, கரிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரிஸ்டன், அத்விகா, கரிகாலன், நித்தேஸ், மானஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-07-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/07/2026 00:00)