திரு. சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை

(முன்னாள் சீமெந்துக் கூட்டுத்தாபனம்- காங்கேசன்துறை, வாகனப் பராமரிப்பு பகுதி மூத்த இயந்திர தொழில்நுட்பவியலாளர்- முகாரி)

சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை

தோற்றம்: 29 நவம்பர் 1942 - மறைவு: 19 ஜூலை 2021

யாழ். கிளானை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், பன்னாலை தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கொல்லன்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(சாணையர்) சங்கரப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

லகுமதி (லண்டன்), முகுந்தன் (லண்டன்), பாலமதி (விரிவுரையாளர்- தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியகலாநிதி மாணிக்கம், மணிமேகலை, மணோன்மணி, சிவதாசன் (முன்னாள்- யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் திரு. நடராசா (கனடா), நகுலேஸ்வரன் (மூத்த தொழில் முயற்சியாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கந்தையா (மண்ணியல் வல்லுனர்) இராசநாயகி தம்பதிகள், சரவணமுத்து (மிருக வைத்தியர்) மரகதவல்லி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை துரைரத்தினம்(முன்னாள் ஆசிரியர்), குணரத்தினம் மற்றும் சிவபாலசிங்கம், அப்புத்துரை, கிருஸ்ணமூர்த்தி(ஓய்வுபெற்ற காசாளர்- தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்கம்), துரைராஜசிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்- வலிகாமம் கல்வி வலயம்), பத்மினிதேவி, கோகிலாதேவி, காலஞ்சென்றவர்களான சிவகுணநாயகி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைத்திலிங்கம் குமரன் (லண்டன்), கலாநிதி எஸ். ஸ்ரீபிருந்திரன் (விரிவுரையாளர்- தேசிய கல்வி நிறுவகம்- மகரகம) ஆகியோரின் அன்பு மாமனும்,

நர்மிகா (லண்டன்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-07-2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டு அஸ்தி கீரிமலை புனித தீர்த்தக்கரையில் சங்கமிக்கப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

கஞ்சிட்டி, பன்னாலை,
தெல்லிப்பளை.
 
தகவல்:- முகுந்தன் வயிரவப்பிள்ளை
 
தொடர்புகளுக்கு:-

முகுந்தன் - மகன் Mobile: +44 773 235 9416
குமரன் - மருமகன் Mobile: +44 794 652 6830
லகுமதி - மகள் Mobile: +44 740 461 2523
பாலமதி - மகள் Mobile: +94 76 644 0742
Dr. பிருந்திரன் - மருமகன் Mobile: +94 77 311 6731

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2021 06:21)