திருமதி. சண்முகம் ஆச்சிமுத்து ஆச்சிம்மா
தோற்றம்: 05 ஏப்ரல் 1940 - மறைவு: 25 மே 2026
காலி - உடுகமையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் ஆச்சிமுத்து ஆச்சிம்மா அவர்கள் 25-05-2026 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி - கருப்பாயி முதலியார் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற அண்ணாமலை - ஆச்சிம்மா முதலியார் தம்பதியினரின் மருமளும்,
காலஞ்சென்ற சண்முகம் முதலியார் அவர்களின் மனைவியும்,
செல்வராணி, காலஞ்சென்ற யேசுராஜா முதலியார், பூபால்ராஜ் முதலியார் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சந்தனம் முதலியார், அங்கம்மாள், மாணிக்கம் முதலியார் மற்றும் சிவபாக்கியம், சிவபாதம் ஆகியோரின் சகோதரியும்,
P.பாலகிருஷ்ணன் முதலியார் (Saravanas Stores), Y. கோகிலா, P.வசந்தகுமாரி ஆகியோரின் மாமியாரும்,
S. அமிர்தம், காலஞ்சென்ற ராமசாமி முதலியார், வசந்தமாலா, காலஞ்சென்ற கந்தசாமி முதலியார் ஆகியோரின் மைத்துனியும்,
K.சாமினி (அவுஸ்திரேலியா) B. வினோதினி (இலண்டன்), B. பிரசன்னா (Saravanas Stores) Y. கவின் , Y. மதுஷான் Y. கனிஷ்கா (அமெரிக்கா) P. தீபீகா. P. வருண் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-05-2026 முற்பகல் 10.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-05-2026 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பூபால்ராஜ் (மகன்):- +94 77 554 5196
பாலகிருஷ்ணன் (சரவணா ஸ்டோர்ஸ்):- +94 76 412 1027
www.tamilthakaval.org
