Mrs. Santhadevi Sooriyamurthi
(ஓய்வுபெற்ற பிரதிப் பணிப்பாளர், தேசிய பாடசாலைகள் கல்வி அமைச்சு - இசுருபாய)
Date of Birth: 21 July 1948 - Deceased: 12 January 2024
திருகோணமலையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தாதேவி சூரியமூர்த்தி அவர்கள் 12-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இந்தியாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா - லீலாவதி (மூதூர்/திருகோணமலை) தம்பதியினரின் அருமை மகளும்,
பொியபோடி காளிப்பிள்ளை (பருத்தித்துறை) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
திருகோணமலை முன்னாள் நகரபிதா காலஞ்சென்ற சூரியமூர்த்தி அவர்களின் அன்புத் துணைவியாரும்,
திருமதி. சூரியபிரபா ஶ்ரீகஜன் (முன்னாள் சக்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்), திருமதி. சூர்யபிரதீபா வாசவன் (விரிவுரையாளர் பல்கலைக்கழக கல்லூரி-யாழ்ப்பாணம்), சூரியபிரசாந்த (Technician at Simple Air - அவுஸ்திரேலியா), சூர்யபிருந்தா (பெஷன் டிசைனர் - இந்தியா), சூர்யபிரதாப் (திரைப்பட இயக்குநர் - இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஶ்ரீகஜன் (ஆசிரியார் - வீரகேசரி), வாசவன் (சித்த வைத்தியர்), நாகசுகந்தி (மருத்துவ ஆய்வாளர் - அவுஸ்திரேலியா), Dr. விஜயகுமார் (இயற்கை வைத்தியர் - இந்தியா), ரெக்னி (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவினாஷ்வரன், அக்ஷரா, சார்கேஷ், ஹம்சத்வனி, மைத்ரேயி, மிர்னாலி, ஓம்கார், வித்யார்தினி, ஹாசினி, ரக்ஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிறிஸ்தாஸ் (கனடா), யோகேஸ்வரி, ஜெயசீலன், மனோகரி, பவளநந்தினி, ஜெயராஜ், காலஞ்சென்ற உமாசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
