Mrs. Santhamalar Anandarajha
Date of Birth: 25 December 1953 - Deceased: 08 February 2025
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தமலர் ஆனந்தராஜா அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், ஆனந்தராஜா (ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசியா, சுதர்சனன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுந்தரலிங்கம், உருத்திரலிங்கம் மற்றும் தியாலிங்கம் (இந்தியா), காலஞ்சென்ற யோகமலர், வேதநாயகமலர் (இலங்கை), சோதிமலர் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேயோன் (அவுஸ்திரேலியா), கவிதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாதனா, ஏகன், அயன், ரெய்னா, அமீரா, அமீலீயா, ஆரியானா ஆகியோரின் அன்பான பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-02-2025 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
