Mrs. Santhanaluxmy Pulenthiran

Santhanaluxmy Pulenthiran

Date of Birth: 24 December 1949 - Deceased: 16 July 2024

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்தானலட்சுமி புலேந்திரன் அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருளம்பலம்-இரத்தினம்மா தம்பதியினரின் பாசமிகு ஏக புத்திரியும்,

பொன்னையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற புலேந்திரன் (சீனன்) அவர்களின் ஆரூயிர் மனைவியும்,

சுரேந்திரன் (டென்மார்க்), ரவீந்திரன் (சுவிஸ்), சஞ்சீபன் (கனடா), கிருஷ்சோபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபாசினி, யோகலட்சுமி, தனிசியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நவீன், லக்‌ஷா, சாருஜன், பவிஷா, பிரஜீத், அச்சயன், ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற செல்வரட்ணம், தவராஜா (தவம்), கணேஷா (Catering உரிமையாளர்), சிவராசா (சிவன்), நந்தகுமார் (ஜெயந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம்- இராசலட்சுமி, புவனேஸ்வரி (மகேஸ்)- துரைராஜா மற்றும் நகுலேஸ்வரி (சீனத்தி)-காலஞ்சென்ற இராசரட்ணம், யோகராணி (தேவி), ரஞ்சினி, நிர்மலாதேவி, கமலராணி (கிளி), காலஞ்சென்ற ராதா மற்றும் சுபாசினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னார் இறுதி வணக்க நிகழ்வுகள் 20-07-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரையும், 22-07-2024 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 8.00 வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்கு வைக்கப்பட்டு,  8.30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) புகழுடல் தகனம் செய்யப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2024 04:00)