திரு. சந்தனம் பத்மநாதன்
தோற்றம்: 16 அக்டோபர் 1945 - மறைவு: 21 பெப்ரவரி 2025
கண்டி - கெங்கல்லயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்தனம் பத்மநாதன் அவர்கள் 21-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தனம் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுசாமி - இரட்ணவள்ளி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மீனாம்பாள் அவர்களின் அன்புக்கணவரும்,
பிரமிளா, மகேந்திரன், பிரசாந்தி, பிரதீப், பிரசாத் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ஞானசுந்தரம் தேவர், ரேணுகா, கண்ணன், சுஹாசினி, ஹெசிகா ஆகியோரின் மாமனாரும்,
தருஷா, பிலோஷன், அஸ்விதா, அபிஷேக், சஹானா, பவனேஷ், துருஷேவ், ஹரிஹேஸ்வர், பிரித்க், ஹ்தேற், துஜாந்தன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் Klassic Apartment (இல-287/2/4, மோதரை வீதி, கொழும்பு - 15) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
