Mrs. Santhanayagi Ganesapillai
Date of Birth: 03 March 1940 - Deceased: 25 December 2025
யாழ். கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெட்டிலிப்பாய் கோண்டாவில் மற்றும் பாமன்கடை வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி, கற்பக விநாயகர் கோவிலடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தநாயகி கணேசபிள்ளை அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி - இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை (கணக்காளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கைலைவாசன், காலஞ்சென்ற செந்திவாசன், யாழினி, கிரிவாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், சுந்தரலிங்ம், புண்ணயமூர்த்தி (இளைப்பாறிய பிரதி முகாமையாளர் - மக்கள் வங்கி), சத்தியவதி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜித்தா, சுகந்தி, சிவனிதா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரூரன், அஸ்வினி, அனோஜன், ஆத்மி, கிருஷ்ணி, அபிலாஷ், சாய்விலாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னராின் இறுதிக்கிரியைகள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் தெற்கு கற்பக விநாயகர் வீதி, இல-01 இல் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
