திரு. உதயகுமார் சந்தியாப்பிள்ளை

(கராத்தே மாஸ்டர்)

உதயகுமார் சந்தியாப்பிள்ளை

தோற்றம்: 21 ஏப்ரல் 1964 - மறைவு: 01 நவம்பர் 2024

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உதயகுமார் சந்தியாப்பிள்ளை அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை-அற்புதம்மா தம்பதியினரின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜா-அற்புதநேசம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நீலியா அவர்களின் அன்புக் கணவரும்,

கெவின் அவர்களின் அன்புத் தந்தையும்,

பற்றிக், தேவகுமாரி, தேவராணி (கனடா), தேவரம்பை (கனடா), விஜயகுமாரி (கனடா), விஜயகுமார் (கனடா), ராஜ்குமார் (இலண்டன்), காலஞ்சென்ற வசந்தகுமார், ஸ்ரீஸ்காந்தகுமார் (இலண்டன்), அற்புதராணி, சூரியகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யூடினா (நோர்வே), எரிக் (லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

காலஞ்சென்றவர்களான சந்திரா, அன்ரன், பெனடிற் தியாகராஜா மற்றும் றொபேட், றெஜினஸ், கில்டா, மடோனா, விஜயமலர், றொசானி, ஜெயபாலன், யேசுரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றொபின், ஷமி ஆகியோரின் அன்பு மச்சானும்,

பற்றிஷன், பிரதீபன், ஷயானி, அமேபா, அனோஜா, அனீபா, ஜெறோம், காலஞ்சென்ற யோண்சன், றொமாறியோ, அலிஸ்ரன், ஸ்ரெவ்னி, டவ்னி, றொசான், டிசான், நிக்‌ஷன், நிறோஷன், நிறோஜினி, நிசாந்தன், கார்லோஸ், கிளவுடியா, பிரியங்கா, ஒலிவற், றிஷானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

றிஷான், றிஷோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

டார்வின், டொமினிக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 11-11-2024 திங்கட்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. Wilfrid’s Catholic Church (1675 Finch Ave W, North York, ON M3J 2G8, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் Beechwood Cemetery (7241 Jane St, Concord, ON L4K 1A7, Canada) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும், தொடர்ந்து மதியம் 1:30 - 5:00 மணி வரை St. Wilfrid’s Catholic Church (1675 Finch Ave W, North York, ON M3J 2G8, Canada) இல் மதியபோசணம் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2024 05:00)