திரு. சந்திரசேகரம் பிரணவன்

(2018 உயர்தர மாணவன் - யாழ். மத்திய கல்லூரி)

சந்திரசேகரம் பிரணவன்

மறைவு: 24 ஆகஸ்ட் 2025

யாழ். கோப்பாய் தெற்கு பரமேஸ்வரி அம்பாள் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம் பிரணவன் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்) - ஸ்ரீநயினைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,

நர்த்தனன் (யாழ் பல்கலைக்கழக ஊழியர்), துவாரகன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அருட்செல்வியின் மைத்துனரும்,

கிஷாறாவின் அன்பு சிறிய தகப்பனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2025 04:00)