திரு. சப்பாணிப்பிள்ளை தியாகராஜா

(சாய் ராம்ஸ் - உரிமையாளர்)

சப்பாணிப்பிள்ளை தியாகராஜா

மறைவு: 20 மார்ச் 2024

இந்தியா திருச்சி மாவட்டம் வேங்கடத்தானூர் கிராமம், மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சப்பாணிப்பிள்ளை தியாகராஜா அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று இரவு 11.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சப்பாணிப்பிள்ளை - ராஜம்மா தம்பதியினரின் புதல்வரும்,

காலஞ்சென்ற கோவிந்தசாமிபிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஷன், கீர்த்திகா, சாய்மனோஜ் ஆகியோரின் அன்பு தந்தையும்,

கலாயினி அவர்களின் மாமனாரும்,

சன்விதா அவர்களின் பாட்டாவும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், சேகர் மற்றும் ராதா, ஜீவா, கனகேஸ்வரி, பிரேமா ஆகியோரின் சகோதரரும்,

சுப்ரமணியம், பத்மநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை - ராஜேஸ்வரி தம்பதியினரின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-03-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் (85/12, வெலியமுன ரோட், ஹேகித்த, வத்தளை) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 23-03-2024 சனிக்கிழமை அன்று இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் கெரவலபிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2024 04:00)