Mrs. Saraswathy Ammal
Date of Birth: 13 May 1936 - Deceased: 28 June 2024
இந்தியா-திருச்சி மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த காலஞ்சென்ற செ.நடேசப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. சரஸ்வதி அம்மாள் அவர்கள் 28-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று மதியம் 1.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கருப்பப்பிள்ளை-காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான செல்லமுத்துபிள்ளை-தைலம்மை அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
ராஜேந்திரன், மகேஸ்வரி, காலஞ்சென்ற சேகர், சிவக்குமார், ரவி, வசந்தி, ரஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலா, சிவானந்தராஜா, ஷர்மிளா, ஆலோகா, லோகேஸ்வரி, அமிர்தலிங்கம் (Michelin Hardware Centre), சிவராஜ் (Lanka Steel) ஆகியோரின் மாமியாரும்,
தெய்வானை (இந்தியா), காலஞ்சென்ற மகாலிங்கம், மனோன்மணி ஆகியோரின் சகோதரியும்,
நவீந்திரன், லக்ஷிதா, சாக்ஷி, வர்ஷவர்தினி, நேத்தீஷ், தனுஷன், லிதூர்ஷன் ஆகியோரின் அப்பாயியும்,
ராகுலன், அகிலா, அபிநிஷா, நிதீஷ்கண்ணா ஆகியோரின் அம்மாயியும்,
சித்தேஷ், ஆத்விகா ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 29-06-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
