Mrs. Saraswathy Mahendran
Date of Birth: 14 March 1926 - Deceased: 22 March 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி மகேந்திரன் அவர்கள் 22-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி வைரமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு. மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி (Chartered Accountant), பதுமநிதி (நியூசர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜகுமரன், கலாவதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கலைவாணி, பிரசாத், பிரதாப் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கார்த்திகா, கௌதம் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், பொன்னுத்துரை, நடராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
