Mrs Saraswathy Mylvaganam
Date of Birth: 21 October 1944 - Deceased: 24 June 2025
யாழ். கரவெட்டி கலட்டினயம் கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி மயில்வாகனம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைத்தியர் முருகேசபிள்ளை (கல்முனை), சிவராசா, அன்னலஷ்மி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குகதாசன் (முன்னாள் அபதிபர் - யாழ். இந்துக் கல்லூரி), புஷ்பாஞ்சலி மற்றும் பாலாம்பிகை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 26-06-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
