Mrs. Saraswathy Nagalingham
Date of Birth: 01 March 1957 - Deceased: 29 September 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் மணியம்பட்டி, காலஞ்சென்றவர்களான வீ.செல்லகுட்டியாபிள்ளை - விசாலாட்சியம்மாள் (Bintheniya Estate, பண்டாரவளை) தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான வை. பெரியசாமிபிள்ளை - சிவகாமியம்மாள் (Glenioch Group, Katutithula Balakrishna Stores, கண்டி) தம்பதியினரின் அன்பு மகளும்,
எஸ்.பி.நாகலிங்ம் (Sealine Trading, கொழும்பு-11) அவர்களின் அன்பு மனைவியுமான சரஸ்வதி அவர்கள் 29-09-2025 திங்கட்கிழமை அன்று மாலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிந்து பாரதியின் பாசமிக்க தாயாரும்,
செந்தூரனின் அன்பு மாமியாரும்,
அயன் கிருஷ்ணாவின் அம்மாயியும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், மகேஷ்வரி, ராதாகிருஷ்ணன், சரோஜா, மனோகரி, சாரதா, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தியாகராஜா ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தேவரட்ணம்பிள்ளை, சந்தரலிங்கம்பிள்ளை மற்றும் நடராஜா (), மாணிக்கவாசகர் () ஆகியோரின் கொழுந்தியாவும்,
காலஞ்சென்ற லலிதாதேவி, கௌரி, லலிதா, நர்மதா நாத்தனாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துசாமிபிள்ளை, வீலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம், ராஜாம்மாள், காலஞ்சென்ற அகிலாண்டம், மல்லிகா ஆகியோரின் மைத்துனியும்,
சுப்ரமணியம் - கமலேஷ்வரி (மலேசியா) தம்பதியினரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-10-2025 வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் இல -16, ரிட்ஜ்வே பிளேஸ், கொழும்பு-04 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
