திருமதி. சரஸ்வதி நல்லையா (தவம்)

சரஸ்வதி நல்லையா (தவம்)

மறைவு: 01 ஜனவரி 2026

யாழ். புலோலி வட மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி நல்லையா அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் சிரேஷ்ட மகளும், காலஞ்சென்றவர்களான நாகப்பு - நாகம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சரத், ரவி, பாலகௌரி, பாலநந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஸ்பராணி, சிவகுமாரி, குலேந்திரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜேஸ்வரி, நல்லம்மா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, மகேந்திரராசா, சிவனேஸ்வரன் மற்றும் யோகேஸ்வரன், கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரகவி, சௌமியா, ஆரகன், சாகியா, கம்சவி, கர்சினி, காலஞ்சென்ற நிசாகரி, அம்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் மந்திகை கருகம்பன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சரத் நல்லையா - மகன்:Mobile : +41 79 887 2914
ரவி நல்லையா - மகன் Mobile : +44 793 183 3367
பால கௌரி - மகள் Mobile : +49 15 78 829 9602
பாலநந்தினி - மகள் Mobile : +94 77 310 7296

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2026 00:00)