திருமதி. சரஸ்வதி இராமச்சந்திர சர்மா

சரஸ்வதி இராமச்சந்திர சர்மா

தோற்றம்: 02 ஆகஸ்ட் 1939 - மறைவு: 31 ஆகஸ்ட் 2026

இந்தியா - தமிழ்நாடு, தஞ்சாவூரைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளையில் வசித்து வந்தவருமான திருமதி. சரஸ்வதி இராமச்சந்திர சர்மா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரேச ஐயர் - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அனந்த சுப்பிரமணிய சர்மா - மங்காளாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராமச்சந்திர சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,

மாலதி, மகாலிங்கம், காஞ்சனா, உமா, விஜயா, சீதாலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாஸ்கரன், பேர்னி, சோமாஸ்கந்தன், ஆனந்த சுப்பிரமணியன், குலேந்திரன், வசீகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கவிதா, ஷொல், வர்ஷா, அகல்யா, ராம், ரமா, சஞ்சயன், குமரன், சுருதி, கார்த்திகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆரியா மற்றும் அனிதாவின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-09-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உற வினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 771 6899
+94 77 779 4026

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2026 00:00)