திருமதி சரஸ்வதி செல்லையா
தோற்றம்: 23 மார்ச் 1937 - மறைவு: 28 நவம்பர் 2023
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லையா அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
வதனராஜன் அவர்களின் அன்புத் தாயாரும்,
துஷந்தினி அவர்களின் பாசமிகு மாமியும்,
ஜிவிசா, கிரிகரன், சுஜித்தா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், சிவபாலசுப்பிரமணியம், ஜெயலக்ஷிமிதேவி மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், சீதாலட்சுமி, சிவலிங்கம் மற்றும் அமிர்தலீலா, பத்மாவதி, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
