திரு. சரவணமுத்து ஆறுமுகம்
(ஓய்வுபெற்ற T.A - நீர்ப்பாசன திணைக்களம்)
தோற்றம்: 22 ஜனவரி 1940 - மறைவு: 22 டிசம்பர் 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து ஆறுமுகம் அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி, கமலாதேவி, Dr. இந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற மதிவதனி, இராசதிலகம் ஆகியோரின் அன்புக் கணவரும்,
ரதி, தேவி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், சந்திரமதி, சிவபதி (சுசி), கலாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளினி, சரவணபவன், காலஞ்சென்ற Dr. நாகரூபன், நிஷாந்தினி, மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராகவன், தொஷிபா (சூட்டி), அகல்யா, விநோதன், வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணா, மதுரிகா, பிறேமிகா, கோபி, ஆர்யா, கமலவன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-12-2024 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையும், 26-12-2024 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் முற்பகல் 10:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
#- 3,2/1, 1St Chapel Lane,
Wellawatte, Colombo-06.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
