Mrs. Saravanamuthu Gowragowry

Saravanamuthu Gowragowry

Date of Birth: 19 November 1952 - Deceased: 28 June 2026

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரவணமுத்து கௌரகௌரி அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தவமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் - பாக்கியம் தம்பதியினரின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

துஸ்யந்தன், கவிதா, கங்கா, காலஞ்சென்ற ரஜீந்தன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

காலஞ்சென்ற பிரஷாந்தன் அவர்களின் மாமியாரும்,

சர்வினா, மேனன், ரஜீன், சார்ஜீவன், ஜனனன், பிரவீன், பிரித்திகா ஆகியோரின் ஆசை பேத்தியும்,

அமீனாவின் அன்பு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், உதயராணி, மற்றும் இராமச்சந்திரன், இந்திராணி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

மேரிதிரேசா, காலஞ்சென்ற சந்திரகுமாரி, அகிலேஸ்வரன், கிருஸ்ணபவானி, பிருந்தினி, யோகராசா, காலஞ்சென்றவர்களான பரமானந்தம், தியாகராசா, பாலசுப்பிரமணியம், வரதராசா, பன்னீர்செல்வன் மற்றும் திருநாவுக்கரசு, சச்சிதானந்தம், குலேந்திரன், திருக்குமரன், நவமணி, கேசவராணி, புஸ்பராணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகம்மா, இராசலெட்சுமி, சொர்ணலெட்சுமி, பரஞ்சோதியம்மா, வசந்தி, கமலராணி, காலஞ்சென்ற இந்திராணி, சாந்திமதி, ஆதிரை, கனகசபாபதி, காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், குணரெத்தினம், பாலசுந்தரம் ஆகியோரின் சகலியும்,

காலஞ்சென்ற கண்ணையா சீதேவி ஆகியோரின் பெறாமகளும்,

சிவகுமாரி (ஜீவா) உதயகுமார், விஜயகுமார், காலஞ்சென்ற செல்வகுமார் (செல்வா) ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-07-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 9:00 மணி வரையும்  Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/07/2026 00:00)