திரு. சரவணமுத்து கனகலிங்கம் (சாந்தன்)

(C.T.B)

சரவணமுத்து கனகலிங்கம் (சாந்தன்)

தோற்றம்: 22 அக்டோபர் 1940 - மறைவு: 10 ஜூன் 2026

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 4ம் வட்டாரம் மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சரவணமுத்து கனகலிங்கம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து - விசாலாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை - சிவயோகம் தம்பதியிளரின் அருமை மருமகனும்,

புஸ்பலீலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தையல்நாயகி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.தாரணி (யாழ். போதனா வைத்தியசாலை), யாதவன் (பொறியியலாளர் - தென் ஆபிரிக்கா), தர்ஷினி (ஆசிரியை - யாழ். ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.சிவகோணேசன் (DMO-DH- கோப்பாய்). வாசுகி (முன்னாள் விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்), ஸ்ரீரங்கநாதன் (ஆசிரியர் - யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், நீலா மற்றும் கணேசதுரை நீலாம்பிகை, காலஞ்சென்ற இராமலிங்கம், நேசராணி தம்பதியர்களின் அன்புச் சம்பந்தியும்,

சரோஜாதேவி (கனடா), காலஞ்சென்ற முத்துலிங்கம், சாருகாசினி (ஓய்வுநிலை அதிபர்), ஈஸ்வரி (ஓய்வுநிலை மருத்துவமாது), வேதாரோகினி (வவுனியா), நவநிதி ஓய்வுநிலை தொழில் அதிகாரி), ஞானோதரன் (ஓய்வுநிலை சிரேஷ்ட முகாமையாளர் BOC), ஞானவரோதயன் (பிரான்ஸ்), ஞானகாந்தன் (ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் மைத்துனரும்,

மனாமிர்தன் (மருத்துபீடம் - ஸ்ரீஜயவர்தனபுர), சிவாம்சன் (மருத்துபீடம் - கொழும்பு). கோபிராம் (மருத்துவ பீடம் - யாழ்ப்பாணம்), நேத்ரா (Stellen bosch University), சயனா (Rand Park High School), பிரவீணன் (யாழ். இந்துக் கல்லூரி), வரோண்யா (வேம்படி மகளீர் கல்லூரி) ஆகியோரின் பாசமிக பேரனும்,

சுதாகர் (கனடா), துவாரகா (கனடா), சுஜன் (கனடா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தீபா (பிரான்ஸ்), சயந்தன் (கனடா) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் இல- 16, கருவேப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 21 221 2302

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2026 00:00)